30 ஜூலை இலங்கை புறக்கணிப்பு குழு மெரீனா கடற்கரையில் இலங்கை புறக்கணிப்பு கையெழுத்து பெரும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்கள் பெண்கள் என எல்லாத் தரப்பினரும் ஆயிரக்கணக்கில் மக்கள் கையெழுத்திட்டனர். பலபேர் தாங்கள் இலங்கை பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணிக்க உறுதி பூண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த பாததையில் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். இலங்கை பொருட்கள் , விமான சேவைகள், கிரிகெட் விளையாட்டு , சுற்றுலா என அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. பொது மக்களிடையே இலங்கை புறக்கணிப்பு மற்றும் இனப்படுகொலை செய்தி பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது .
பல பேர் இலங்கை பொருட்களை எப்போதும் வாங்க மாட்டோம் என சத்தியம் செய்து கை எழுதிதிட்டனர். இதை வெற்றிபெற செய்த எல்லாத் தோழர்களுக்கும் என் நன்றிகள்.
நன்றி
ராஜ்குமார் பழனிசாமி
9566224027
No comments:
Post a Comment